உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மோதி விபத்து இன்ஜி., மாணவர் பலி

பஸ் மோதி விபத்து இன்ஜி., மாணவர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற பொறியியல் கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் ஜகாங்கீர் மகன் கினக்ஷா,21; சென்னையில் தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லுாரி விடுமுறையால், தன்னுடன் படிக்கும் சக நண்பரான, கள்ளக்குறிச்சி அடுத்த தென்தொரசலுாரை சேர்ந்த நடராஜன் மகன் நவீன், 21; என்பவருடன் ஹோண்டா பைக்கில், சென்னையில் இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்துள்ளனர்.பைக்கை நவீன் ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே வந்தபோது, தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் நவின் சம்பவ இடத்திலேயே இறந்தார். கினக்ஷா பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி