உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தொழில் முனைவோர் பயிலரங்கம்  

 தொழில் முனைவோர் பயிலரங்கம்  

திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கி தொழில் முனைவில் வாய்ப்புகள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொழில் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் வரவேற்றார். பயிற்சியாளராக கடலுார் தனியார் பேக்கரி உரிமையாளர் லட்சுமி பிரியா மாணவர்களுக்கு அடுமனை உணவு தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்து பேசினார். விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். விழாவை, பிரதாப் சிங், முரளி கிருஷ்ணா, ராபர்ட், பழனிசாமி, கலியபெருமாள், கார்த்திகேயன், மணிகண்டன், மாரிமுத்து, ஆர்த்தீஸ்வரி, ராமு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வணிக நிர்வாகவியில் துறை உதவி பேராசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை