உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்; விழுப்புரத்தில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். செயலாளர்கள் பலராமன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் சங்கர், குகன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், வெறி நாய்களை கருணை கொலை செய்ய கால்நடை துறை மூலம் அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, உத்தரவை மாநில அரசு திரும்ப பெற வேண்டும். நாய்களுக்கு வெறிபிடித்துள்ளது கண்டறியப்பட்டால், தடுப்பு ஊசி போடுவதோடு, இன பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்திட வேண்டும். இந்த அரசாணையை திரும்ப பெறவில்லையெனில், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதோடு, சங்கம் சார்பில் நீதிமன்றத்தை நாடப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி