உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 40வது தேசிய கண்தான இரு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லுாரி, துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற ஊர்வலம் கல்லுாரியிலிருந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை நுழைவு வாயில் வரை சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், கல்லுாரி துணை முதல்வர் தாரணி, மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, துறை தலைவர் ரவிக்குமார், பேராசிரியர் தரணிவேல் ,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் உமாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி