மேலும் செய்திகள்
முன்னாள் கவர்னர் பிறந்த நாள்
04-May-2025
311 பேருக்கு கண் பரிசோதனை
12-May-2025
வன்னியர் சங்கம் ராமதாஸ் சொத்து அல்ல!
13-May-2025 | 1
விழுப்புரம் : விழுப்புரத்தில், சங்கமம் லயன்ஸ் சங்கம், சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திலீப்குமார், சங்கமம் லியோ சங்கத் தலைவர் புவனேஷ், பள்ளி தாளாளர் சோழன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க செயலாளர் கிஷோர் வரவேற்றார்.லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் ரவி, முன்னாள் நகராட்சி சேர்மன் ஜனகராஜ் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில், 307 பேருக்கு கண் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. 105 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.சீனிவாசா சிண்டிகேட் பாபு மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், ராஜகணபதி, இளங்கோ, விஜய்சந்த், செந்தில்குமார், பிரகதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.
04-May-2025
12-May-2025
13-May-2025 | 1