உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பண்ணை பள்ளி நிகழ்ச்சி 

பண்ணை பள்ளி நிகழ்ச்சி 

திண்டிவனம்: மரக்காணம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் மூலம் கர்ணாவூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி நடந்தது. இந்தப் பண்ணை பள்ளி வகுப்பில் விதை முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கம் மற்றும் கலந்துரையாடல் நடந்தது. மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் சாகுபடி செய்வதால், வேர் முடிச்சு மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை, மண்ணின் வளத்தை மேம்படுவது குறித்தும், சோயாபீன்சை ஒரு மாற்று பயிராக சாகுபடி செய்யும் போது ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் தேவையான புரதச்சத்து கிடைக்கப்பெறுவது குறித்தும் விளக்கி கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், உதவி தொழில் மேலாளர் அய்யனார் மற்றும் கர்ணாவூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ