விபத்தில் விவசாயி காயம் பஸ் டிரைவர் கைது
விழுப்புரம்: விபத்தில் விவசாயி காயமடைந்த வழக்கில், தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கையை சேர்ந்தவர் சிவக்குமார், 50; விவசாயி. இவர், தனது பைக்கில், நேற்று முன்தினம் விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.விழுப்புரம் டவுன் போலீசார், வழக்குப் பதிந்து, கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்த பஸ் டிரைவர் நந்தகோபால், 40; என்பவரை கைது செய்தனர்.