உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

மரக்காணம் : மரக்காணம் அடுத்த வைடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேந்திரன், 39; விவசாயி. இவரது தாய் ருக்மணி, 60; மகன் புவியரசன்,10; மூவரும் நேற்று மாலை 6:00 மணியளவில் வைடப்பாக்கம் அருகே உள்ள அவர்களது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தனர்.அப்போது, மழை பெய்ததால் 3 பேரும் அங்குள்ள வேப்பமரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தனர். திடீரென மின்னல் தாக்கியதில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ருக்மணி, புவியரசன் ஆகிய இருவரும் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ