மேலும் செய்திகள்
வேர்க்கடலை அறுவடை பணி துவக்கம்
23-Sep-2025
செஞ்சி: செஞ்சி பகுதியில் சாகுபடி செய்துள்ள மாணாவரி வேர்கடலை பயிர்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செஞ்சி மற்றும் மேல்மலையனுார் தாலுகாவில், 5 ஆயிரம் ஏக்கர் அளவில் மாணாவாரி வேர்கடலை சாகுபடி செய்கின்றனர். பொதுவாக, 105 நாள் பயிரான மாணாவாரி வேர்கடலை பயிருக்கு மிதமான மழை போதுமானது. தற்போது செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் சாகுபடி செய்துள்ள வேர்கடலை பயிர்களில் பூக்கள் விட்டு, காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்த நேரத்தில் இரவில் தொடர்ந்து கனமழை பொழிந்து நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், வேர்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிடும். மேலும், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும். காய் பிடிக்கும் பருவம் என்பதால் வேர்களில் தண்ணீர் சேர்ந்து காய் பிடிப்பது குறைவதுடன், சக்கையாக வலுவிழந்தும் போய் விடும். வழக்கமாக ஒரு செடியில் 15 முதல் 20 காய்கள் சராசரியாக இருக்க வேண்டும். மழையில் சிக்கும் செடிகளில் 10க்கும் குறைவான காய்களே இருக்கும். இதனால் மகசூல் பாதியாக குறைவதுடன், காய்களும் தரமில்லாமலும் இருக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வயல்களில் அதிக தண்ணீர் வருவதை தடுக்கவும், மழை நின்ற உடன் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் வகையில் வடிகால் வசதியை மேம்படுத்தி, நீர் தேங்காமல் பராமரித்தால் ஓரளவிற்கு பாதிப்பில் இருந்து வேர்கடலை பயிர்களை பாதுகாக்க முடியும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
23-Sep-2025