மனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., செயலாளர் சவுரிராஜன் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். மாவட்ட நிர்வாகக்குழு ராமச்சந்திரன், துணை தலைவர்கள் ஜீவா ஜெயராமன், அய்யனாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாய தொழிலாளர்களுக்கு நுாறு நாள் வேலை, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.