உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.முற்றுகை போராட்டத்திற்கு, மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முருகன், கணேசன், கருப்பையா உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியதாவது; விழுப்புரம் மாவட்டத்தில் துார்வாரப்படாத ஏரி, குளங்களையும், மணிமுத்தாறு, கெடிலம் ஆறு, பெண்ணையாறுகளிலிருந்து வரும் பாசன வாய்க்கால்களையும் துார்வாரி புனரமைக்க வேண்டும். அணை கட்டுகளின் மதகுகள் மறுசீரமைக்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்திற்கு அரசு அறிவித்தபடி ரூ.304 கோடி நிதியில், திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கரும்பு டன்னிற்கு ரூ. 4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500ம் வழங்க வேண்டும். இயந்திர நடவுக்கு ஹெக்டேருக்கு ரூ. 4 ஆயிரம் வழங்குவதுபோல், கையிற்றால் பிடித்து நடவு செய்யும் நெல் சாகுபடிக்கும், நடவு மானியம் அரசு வழங்க வேண்டும். மாவட்டத்தில் கரும்பு ஆலை வழி நெடுஞ்சலைகளை அகலப்படுத்த வேண்டும், மக்காச்சோளத்தையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை