உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செஞ்சி : சத்தியமங்கலத்தில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமம் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ளது. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பதுடன் இரவில் டாக்டர்கள் இருப்பதில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தாசில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.இதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சத்தியமங்கலத்தில் பஸ்கள் பஸ் நிறுத்தத்திற்கு வராமல் பைபாசில் செல்வதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட துணைத் தலைவர் நரசிம்மராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஆல்பர்ட் வேளாங்கண்ணி, வெங்கடேசன், சம்பத், சபாபதி, எத்திராஜ், பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் பாபு, அ.தி.மு.க., கிளை செயலாளர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை