உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைப்பு

உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைப்பு

வானுார்: வானுார், வட்டார வேளாண்மை துறை சார்பில், ஒவ்வொரு கிராமங்களிலும், உழவரைத்தேடி வேளண்மை உழவர் நலத்துறை திட்டம் துவக்கப்பட்டு வருகிறது.வட்டார அலுவலர்கள் உழவர்களை வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் ஒரு பகுதியாக தேர்குணம் கிராமத்தில், திட்ட துவக்க விழா நடந்தது. வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்றார். வேளாண்மை பொறியியல் துறை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் சுமதி, உதவி செயற்பொறியாளர் நாராயணலிங்கம் ஆகியோர், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வினோதினி, கவுன்சிலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன், ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை