மேலும் செய்திகள்
2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
15-Oct-2024
மயிலம், : மயிலம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் அனுமதியின்றி நாட்டு வெடிகளை விற்பனைக்கு வைத்திருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எடப்பாளையம் கிராமத்தில் உரிய உரிமம் இன்றி நாட்டு வெடிகளை விற்பனை செய்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி, 59; இவரது மகன் கணேசன் 35; ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.
15-Oct-2024