உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

விழுப்புரம்: காணை அருகே சென்னகுணத்தை சேர்ந்த நாகப்பன் மனைவி ஜெயா, 30; இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெயா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் போலீசில் புகாரளித்தார். இது குறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ