மேலும் செய்திகள்
உரம், வற்றல் தயாரிக்க பயிற்சி
25-Mar-2025
திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உரம் தயாரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.வேளாண் அறிவியல் நிலையத்தில், திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சானுார் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு மாணவிகள், தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.அதேபோல் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு அங்கக உரம் தயாரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. வேளாண் அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன் தலைமை தாங்கினார். முனைவர் ஜமுனா, குமரேசன் முன்னிலை வகித்தனர்.உரம் தயாரிப்பு பயிற்சியில், பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு மண்புழு உரம் மற்றும் செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரித்தல் பற்றியும் அசோலா வளர்ப்பு குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.
25-Mar-2025