உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  முகையூர் ஒன்றியத்தில் வயல் ஆய்வுப் பணி

 முகையூர் ஒன்றியத்தில் வயல் ஆய்வுப் பணி

கண்டாச்சிபுரம்: முகையூர் ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் வயலில் ஆய்வு மேற்கொண்டனர். முகையூர் அடுத்த பரனுார், சித்தாமூர், பில்ராம்பட்டு, ஆலம்பாடி, வடகரை தாழனுார் பகுதிகளில் வயல் ஆய்வுப் பணி நடந்தது. முகையூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியதர்ஷினி தலைமையில் நடந்த ஆய்வில், சாம்பார் வெங்காயம், வெண்டை பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட விவசாய பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பரனுார் பகுதி விவசாயிகளுக்கு தோட்டக்கலை மூலம் நிறுவப்பட்ட நிரந்தரப் பந்தல் அமைப்பில் பாகற்காய் அறுவடை, தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார். முகையூர் வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் பரத், குமரவேல் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி