உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் இறுதிகட்ட பணிகள் தீவிரம்

அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் இறுதிகட்ட பணிகள் தீவிரம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தின் கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் மறைந்த முன்னாள் வேளாண் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கமும், சமூக நீதிக்காக போராடிய இடஒதுக்கீடு தியாகிகள் மணி மண்டபமும் அமைந்துள்ளது. இதனை கடந்த ஜூன், 26ம் தேதி வன்னியர் பொதுச்சொத்து நலவாரிய தலைவர் ஜெயராமன், வாரிய உறுப்பினரான எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா ஆகியோர் பார்வையிட்டனர். அங்குள்ள நுாலகத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய போட்டித்தேர்வர்களுக்கு இலவச பயிற்சி மையம் அமைத்து, இன்னும் 15 நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்படும் என்றனர். இந்நிலையில், அரசு தேர்வு பயிற்சி மையம் துவங்க தாமதம் ஏற்படுவது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, வன்னியர் பொது சொத்து நலவாரிய தலைவர் ஜெயராமன் ஆலோசனையின் பேரில், வாரிய உறுப்பினரான அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மேற்பார்வையில், தேர்வு மையத்திற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நுாலகத்தில், ரூ.1.5 லட்சம் செலவில் 30 நாற்காலிகள், ரூ.1.65 லட்சம் செலவில் ஆன்லைன் பிரமாண்ட எல்.இ.டி., 'திரை' மற்றும் குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துவரும், அன்னியூர் சிவா கூறுகையில், ' தமிழகம் முழுதும் வன்னியர் பொது சொத்து நலவாரியம் சார்பில், கல்வி வளர்ச்சிக்கான சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரத்தில் இலவச பயிற்சி மைய கட்டமைப்பு பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ் அகாடமி மூலம், ஆன் லைன் வகுப்புகள் பயிற்சியாளர் நியமனம் செய்து, இம்மாத இறுதிக்குள் பயிற்சி மையம் திறக்க ஏற்பாடு செய்துள்ளோம்,' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை