உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் மருந்தகத்தில் தீ   ரூ .3 லட்சம் பொருட்கள் சேதம்  

முதல்வர் மருந்தகத்தில் தீ   ரூ .3 லட்சம் பொருட்கள் சேதம்  

கண்டமங்கலம்: கண்டமங்கலம் முதல்வர் மருந்தகத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மருந்துகள் எரிந்து சேதமானது. கண்டமங்கலம் நான்கு வழிச்சாலையில் தனியார் கட்டடத்தில் தமிழக அரசின் முதல்வர் மலிவு விலை மருந்தகம், கடந்த பிப்.24ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை மருந்தகத்தில் தீபிடித்து எரியத்தொடங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்ற மின்சாரத்தை துண்டித்தனர். தகவல் அறிந்த கூட்டுறவு சங்க செயலர் மற்றும் ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மருந்தகத்தை திறந்து பார்வையிட்டனர். மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதும், இதில் ஏ.சி., கம்ப்யூட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ