மேலும் செய்திகள்
தீயணைப்புத்துறை வெள்ள மீட்பு செயல் விளக்கம்
03-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தீயணைப்பு துறை சார்பில் பருவமழை மீட்டு பணிகள் குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் நடந்தது.விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடந்தது. விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராம ஏரியில் நடந்த நிகழ்வுக்கு விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, ஊராட்சித் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில், முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஷாஜகான், பிரபு உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டு, மழை காலங்களில், நீர் நிலைகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வது, அவசர காலத்தில் நீரில் மூழ்கியவர்களை மீட்டு, முதலுதவி அளிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். ஏரியில் மீட்பு படகில் சென்று, நீரில் சிக்கியவர்களை மீட்பது, தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிழப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, பார்வையிட்டனர்.
03-Oct-2024