உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார் கல்லுாரி முதல்வர் சங்கர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜெகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழக பேராசிரியர் அழகு மூர்த்தி இன்ஜினியரிங் துறையில் தொழில் முறை திறன்கள் மற்றும் நிர்வாக ரீதியாக தங்களை தயார்படுத்திக் கொள்வது குறித்து பேசினார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, கல்லுாரி முதல்வர்கள் அன்பழகன், பாலாஜி, மதன்கண்ணன், வெங்கடேஷ், சிகா பள்ளி முதல்வர் கோபால், கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர் துறைத் தலைவர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை