உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

மரக்காணம்: மரக்காணம் அடுத்த எண்டியூரில் மந்தன்கன் ஏரி மற்றும் சித்தேரியில் வளர்ப்புக்காக மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ், எண்டியூர் கிராமத்தில், மந்தன்கன் ஏரி மற்றும் சித்தேரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கலெக்டர் பழனி மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு துவக்கி வைத்து கூறுகையில், 'மந்தன்கன் மற்றும் சித்தேரியில் இந்திய பெருங்கெண்டை, விரால், கட்லா மற்றும் ரோகு மிருகால் என 1,47,740 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. இதன் வளர்ப்பு காலம் 4 முதல் 6 மாதம் ஆகும்' என்றார்.மீன்வள உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மரக்காணம் தாசில்தார் சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ