மேலும் செய்திகள்
மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா
08-Jun-2025
விழுப்புரம்; மின் கம்பியில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகில், துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. துணை மின் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள விழுப்புரம் தலைமை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் வழியாக மின்கம்பிகள் செல்கிறது. இந்த மின் கம்பியில் அதிக அளவிலான கொடிகள் படர்ந்துள்ளது.மழை பெய்யும்போது, இதனால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மின் கம்பியில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08-Jun-2025