நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க செயற்குழு
விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஜெயராஜ், பழனி, செல்வராஜ், கண்ணன் முன்னிலை வகித்தனர். நாகூர் கனி வரவேற்றார். பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தமிழகத்தில் நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு, இயல், இசை, நாடக மன்றம் சார்பில் வழங்கும் ஓய்வூதியம் பெறும் நடைமுறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 2,000 கலைஞர்களுக்கு என ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கலைமாமணி விருதுகளை தகுதிவாய்ந்த கிராமப்புற கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழுப்புரம் மாவட்ட தலைவர் செல்வம் நன்றி கூறினார்.