| ADDED : டிச 03, 2025 06:17 AM
விழுப்புரம்: விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பறவையான மயில், மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களில் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. மயில்கள், கூட்டம் கூட்டமாக சென்று, விளை நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. அவற்றை விரட்டினாலும், கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால், கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர். இந்த மயில்களை சமூக விரோதிகள், பிடித்து அதன் தோகையை பிடுங்குவது, வேட்டையாடும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் கிராமங்களில் வனத்துறையினர் ரோந்து சென்று, கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.