எதிர்க்கட்சிகள் சொல்வதை கேட்காத முதல்வர் ; முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
திண்டிவனம் : 'எதிர்க்கட்சி சொல்வதை முதல்வர் ஸ்டாலின் கேட்பதில்லை என, முன்னாள் முதல்வர் பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.திண்டிவனத்தில் புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை பாதிப்புகள் அதிகம். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழையால் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிற்கள் சேதமடைந்துள்ளது, நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.திண்டிவனம், நாகலாபுரம் பாலப் பணியை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர், ஆனால், சிறப்பான ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். இங்கு வந்து பார்த்தால் தான் ஆட்சியின் அவலங்கள் தெரியும்.எதிர்க்கட்சியான நாங்கள், மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சொல்ல வேண்டியது எங்கள் கடமை, அதனை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அதனை இந்த முதல்வரிடம் எதிர்பார்க்க முடியாது. இது மக்கள் விரோத அரசாகவும், விவசாயிகள் விரோத அரசாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.