மேலும் செய்திகள்
செய்யூர் அரசு கல்லுாரிக்கு நிலம் ஒதுக்கீடு
27-Apr-2025
விழுப்புரம்: அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, கருணாநிதி பெயர் சூட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்தார்.விக்கிரவாண்டி சட்ட சபை தொகுதி, அன்னி யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க விழாவில், பொன்முடி எம்.எல்.ஏ., பேசியதாவது;கடந்த காலங்களில் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் இல்லாததால் படிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. மாவட்டத்தில் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லுார், செஞ்சி, திருக்கோவிலுார், திண்டி வனம், செஞ்சி, விக்கிரவாண்டி பகுதிகளில் தற்போது அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளது. மயிலத்தில் மட்டும் அரசு கல்லுாரி இல்லை.பெண்கள் அதிகம் படிக்க வேண்டும் என முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.கிராமப்புற மாணவர் கள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கல்லுாரி துவங்கப்பட் டுள்ளது. இக்கல்லுாரியில் உள்ள 5 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெற வேண்டும். இக்கல்லுாரிக்கு, கருணா நிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என பெயர் சூட்ட முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். பேராசிரியர்கள், சிறப்பாக செயல்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர வேண்டும் என பேசினார்.
27-Apr-2025