உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பயிற்சி மைய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

 பயிற்சி மைய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி சாத்தனுாரில் பயிற்சி மைய கட்டடத்திற்கு எம்.பி., அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். விக்கிரவாண்டி ஒன்றியம் வி சாத்தனுாரில் ஆதி திராவிடர் பொதுநல சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம் மற்றும் பயிற்சி மைய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதன் அடிக்கல் விழாவிற்கு ஆதிதிராவிடர் பொதுநல சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். வி.சி., கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்து பேசினார் . மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், மாவட்டச் செயலாளர்கள் திலீபன், மலைச்சாமி, சங்க செயலாளர் தெய்வசிகாமணி, பொருளாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் வெற்றி வேந்தன் ,ஜெயச்சந்திரன் கிட்டு, கார்மேகம், ஒன்றிய கவுன்சிலர் ஏகாம்பரம், ஊராட்சி மன்ற தலைவி விமலா தமிழரசன், சமூக ஆர்வலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி