காந்தி மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா
வானுார் : திருச்சிற்றம்பலம் காந்தி நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி நிர்வாகி ஆனந்தன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பாலமுரளி வரவேற்றார். விழாவில் ஒன்றிய சேர்மன் உஷா முரளி 116 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், வானுார் ஒன்றிய துணைத் தலைவர் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், மாவட்ட கவுன்சிலர் பிரேமா குப்பு சாமி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.