மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை
22-Apr-2025
வானுார்: ஆரோவில் கிராம செயல்வழிக்குழு சார்பில், உப்புவேலூர் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் ஆரோவில் கிராம செயல்வழிக் குழு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் உப்புவேலுார் கிராமத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குநர் ஜெரால்டு மோரீஸ் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா முன்னிலை வகித்தனர். டாக்டர் சுமித்ரா தலைமையில் மருத்துவக்குழுவினர், பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்து, சிலர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சிகிச்சைக்கு செல்ல பரிந்துரை செய்தனர். மகளிர் குழுக்களின் பிரதிநிதிகள் கண்ணகி, செல்வி, தேவி, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு அய்யப்பன், ஏழுமலை, முகாம் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Apr-2025