மேலும் செய்திகள்
ராமகோபாலன் பிறந்த நாள் அன்னதானம் வழங்கல்
20-Sep-2025
செஞ்சி : செஞ்சியில், காங்., சார்பில் காந்தி ஜெயந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவு தினம் முப்பெரும் விழாவாக நடந்தது. செஞ்சி கூட்ரோட்டில் நடந்த விழாவுக்கு தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் லூர்து சேவியோ முன்னிலை வகித்தார். இதில் மகாத்மா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி மற்றும் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விஜயகுமார், ராஜா, துரை, ஜான் பாஷா, சேவியர், முனுசாமி, மணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
20-Sep-2025