மேலும் செய்திகள்
பிரசன்ன விநாயகர் கோவிலில் பள்ளி மழலையர் வழிபாடு
25-Aug-2025
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாஹர் பப்ளிக் மற்றும் நாஹர் நர்சரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவர்களும் விநாயகர் உருவ சிலையை களி மண்ணிலும், மஞ்சள் மற்றும் காய்கறிகளாலும் பல்வேறு பொருட்களைக் கொண்டு வடிவமைத்திருந்தனர். நடனம், நாடகம், விநாயகர் துதி பாடல்கள் குழந்தைகள் பாடி விநாயகருக்கு பூஜை செய்தனர். பள்ளி தாளாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அரசப்பன் பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
25-Aug-2025