மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் சாலைப்பணி நகரமன்ற தலைவர் ஆய்வு
04-Oct-2024
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி எரிவாயு தகன மேடை பணியை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.திண்டிவனம் - மரக்காணம் ரோடு, கிறிஸ்தவ கல்லறை அருகே நகராட்சி சார்பில் 1.65 கோடி ரூபாய் செலவில், எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.விரைவில் முடிந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா நேற்று காலை பணியை பார்வையிட்டு, விரைந்து முடிக்க ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார்.நகராட்சி கமிஷனர் குமரன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ஜனார்த்தனன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
04-Oct-2024