உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு ரத்தின அங்கி அலங்காரம்

 வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு ரத்தின அங்கி அலங்காரம்

செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் சுவாமி, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்தின அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரம் நடந்தது. நேற்று அதிகாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனையுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. மாலை 6:00 மணி வரை நீண்ட வரிசையில் நின்று 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செஞ்சிகோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டுக் குழுவினர், அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் செஞ்சி நகர பொது மக்கள் செய்திருந்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் 12 அடி உயர தட்சணாமூர்த்தி சிலைக்கு நேற்று காலை 7:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.தொடர்ந்து சுவாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ