உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் தொகுதியில் 7 இடங்களில் அரசு கட்டங்கள் திறப்பு விழா

விழுப்புரம் தொகுதியில் 7 இடங்களில் அரசு கட்டங்கள் திறப்பு விழா

விழுப்புரம்; விழுப்புரம் தொகுதியில் 7 இடங்களில், 64.76 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவ லக கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த கப்பூரில் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கோவிந்தபுரம், சாமிபேட்டையில் தலா 8.50 லட்சத்திலும், மரகதபுரத்தில் 13.16 லட்சத்திலும், ஜானகிபுரம், ராமையன்பாளையத்தில் தலா 9.80 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட்ட ரேஷன் கடைகள். வளவனுார் அடுத்த சாலையாம்பாளையத்தில் 6.50 லட்சம் ரூபாய் என 7 இடங்களில் 64.76 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜா, சந்திரசேகர், முருகவேல், தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன். மாவட்ட விவசாண அணி துணை அமைப்பாளர் கேசவன், மாவட்ட கவுன்சிலர்கள் வனிதா அரிராமன், சிவக்குமார், மாவட்ட மகளிரணி சந்திரலேகா, ஒன்றிய துணை தலைவர் உதயகுமார். மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறுப்புக்குழு ஜெயா பன்னீர்செல்வம், பூங்குன்றம், காமராஜ், ஊராட்சி தலைவர்கள் தேவி ரமேஷ், தனசேகர், மோகனாதேவி பாலமுருகன். முன்னாள் தலைவர்கள் மணி, முத்துசாமி, ராம், தகவல் தொழில்நுட்ப அணி மக்களன்பன் மற்றும் நிர்வாகிகள், பொது ம க்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை