அரசு பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 12.32 கோடி ரூபாய் மதிப்பில் 9 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 29 மாவட்டங்களில் 141 பள்ளிகளில் புதிதாக கட்டிய வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.மாவட்டத்தில் விழுப்புரத்தில் 3.17 கோடி ரூபாயில் 15 வகுப்பறைகள், அன்னியூரில் 63 லட்சத்தில் 3 கூடுதல் வகுப்பறைகள். தேவனுாரில் 84.72 லட்சம் ரூபாயில் 4 வகுப்பறைகள், பில்லுாரில் 42.36 லட்சம் ரூபாயில் 2 வகுப்பறைகள் அனுமந்தையில் 2.11 கோடி ரூபாயில் 10 வகுப்பறைகள்.ஆட்சிப்பாக்கத்தில் 42.72 லட்சம் ரூபாயில் 2 வகுப்பறைகள், முருங்கம்பாக்கத்தில் 1.27 லட்சம் ரூபாயில் 6 வகுப்பறைகள். அகூரில் 1.28 கோடி ரூபாயில் 6 வகுப்பறைகள். கிளியனுாரில் 2.13 கோடி ரூபாயில் 10 வகுப்பறைகள் என மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகளில், 58 வகுப்பறை கட்டடங்கள், 12 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி வைத்தார். நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட முதல்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், தி.மு.க., நகர செயலாளர் சக்கரை.நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.