மாநில நீச்சல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தேர்வு
விக்கிரவாண்டி: விழுப்புரம் அடுத்த காரணை பெரிச்சானுார் ஏ.ஆர்.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர். விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் 21 தங்கபதக்கம், 8 வெள்ளி பதக்கமும்,11 வெண்கல பதக்கமும் பெற்றனர். இதில் முதலிடம் பெற்ற மாணவிகள் திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநில நீச்சல் போட்டியில் பங்கேற்ற உள்ளனர். மேலும் இப்பள்ளி மாணவிகள் ஜிம்னாஸ்டிக், டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்,உடற்கல்வி ஆசிரியை அமலோற்பவமேரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.