உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம், மயிலம் பகுதிகளில் அரசு செயலர், கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், மயிலம் பகுதிகளில் அரசு செயலர், கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி, மயிலம் ஒன்றிய பகுதியில், அரசு முதன்மைச் செயலர் மற்றும் கலெக்டர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மயிலம் ஒன்றியம், பேரணி ஊராட்சி பகுதியில் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக், விழுப்புரம் கலெக்டர் பழனி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் மற்றும் செவிலியர் வருகை, மருந்து இருப்பு பதிவேடு, பயனாளிகள் பதிவேடு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பேரணி ஊராட்சியில், வேளாண்மைத் துறை சார்பில், ஒன்றரை ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இந்த நெல் வயல் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதை, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்ஷ நிகம், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரூடவ்ஸ்வர், துணை இயக்குநர் சீனுவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மஸ்ரீனி, பி.டி.ஓ.,க்கள் மற்றும் ஊராட்சி தலைவர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை