உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரம் :தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின், மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் பேரவைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. வி.ஆர்.பி., பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு. அரசு அலுவலர் ஒன்றிய மாநில தணிக்கையாளர் பன்னீர்செல்வம் தேர்தல் அலுவலராக செயல்பட்டார்.சட்ட ஆலோசகர் கவி வீரப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் சடகோபன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடந்த சங்க தேர்தல் முடிவில், மாவட்ட தலைவராக பொது நுாலகத்துறையைச் சேர்ந்த பூவழகன் தேர்வு செய்யப்பட்டார்.செயலாளராக முகம்மது காஜா, பொருளாளராக வெங்கடேசபெருமாள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !