உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏவலுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்

ஏவலுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்

திண்டிவனம்: ஏவலுார் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒலக்கூர் அடுத்த ஏவலுாரில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏவலுார் ஊராட்சி தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெஸ்டீன்ராணி, ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் ஒலக்கூர் ஒன்றிய துணை சேர்மன் ராஜாராம் பேசினார். கூட்டத்தில், திண்டிவனத்திலிருந்து ஏவலுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். ஏவலுாரில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ