உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரசு பள்ளி சாதனை

முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரசு பள்ளி சாதனை

விழுப்புரம்; விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர். விழுப்புரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் சிகா மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டனர். அதில், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் அணியினர் விளையாடி, மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதித்தனர். கிரிக்கெட் போட்டியில் சாதித்து வந்த மாணவர்கள் குழுவினரை பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராமன், பிரகாஷ் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை