மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டு விழா
29-Mar-2025
மயிலம்; மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரியில் 83ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.மயிலம் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், மயிலம் 20ம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பிரகாஷ், தமிழ்நாடு கல்லூரி கல்வி உதவி இயக்குனர் மலர், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை பாட பிரிவில் 505 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Mar-2025