உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைகேட்பு கூட்டம்: 686 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்: 686 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 686 மனுக்கள் குவிந்தன.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை செய்து, தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது கவனம் செலுத்தி தீர்வு காண அறிவுறுத்தினார். கூட்டத்தில் முதியோர் உதவிதொகை, பட்டா மாறுதல், தொழில் துவங்க கடனுதவி கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 686 மனுக்கள் பெறப்பட்டன.தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு, கலெக்டர் ஷேக் பணிநியமன ஆணையை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ