உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்வித்துறையில் இன்று குறைகேட்பு கூட்டம்

கல்வித்துறையில் இன்று குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் இன்று நடக்கிறது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளிகள், வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் இன்று 19ம் தேதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !