மேலும் செய்திகள்
கடையில் திருட்டு
30-May-2025
செஞ்சி, : மளிகை கடை பூட்டை உடைத்து 40 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்தவர் முகமது ரபிக், 48: இவர், செஞ்சி - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் மாடியில் வீடு உள்ளது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கீழே கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லாவில் இருந்த 40 ஆயிரத்து 700 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
30-May-2025