மேலும் செய்திகள்
குட்கா பதுக்கி விற்றவர் கைது
06-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா பதுக்கி விற்ற மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில், குட்கா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் பகுதியில் மளிகைக் கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, திருப்பாச்சனுார் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன், 39; என்பவரது மளிகைக் கடையில், 30 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் கோவிந்தன் மற்றும் மொத்த விற்பனையாளரான விழுப்புரம், கம்பன் நகரைச் சேர்ந்த அகமது உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.
06-Oct-2024