குட்கா கடத்தல்: ஒருவர் கைது
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அருகே குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் அருகே குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு மழவந்தாங்கல் பகுதியில் எஸ்.ஐ காத்தமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருவண்ணாமலையில் இருந்து மழவந்தாங்கல் நோக்கி வந்த காரை போலீசார் சோதனை செய்ததில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் கடத்தலில் ஈடுபட்ட மலையரசன்குப்பம் சுபாஷ், 32; என்பவரை போலீசார் கைது செய்து, 3 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் 5 மூட்டையில் இருந்த 70 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.