உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கையெழுத்து இயக்கம் 

கையெழுத்து இயக்கம் 

மயிலம்; மயிலம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் காங்., சார்பில் ஓட் திருட்டை தடுக்க தவறிய இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொது குழு உறுப்பினர் கண்ணன், திண்டிவனம் நகர கமிட்டி தலைவர் விநாயகம், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தனர். மயிலம் வட்டார தலைவர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் விஷ்ணு பிரசாத் எம்.பி., கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நகர கமிட்டி தலைவர் சூரியமூர்த்தி, குமார், வட்டார தலைவர்கள் இளவழகன், புவனேஸ்வரன், சக்திவேல், காத்தவராயன் இருதயராஜ், பாபு, வட்டாரத் துணைத் தலைவர்கள் சுரேஷ்பாபு, விநாயகம், லட்சுமி, காளியம்மாள் மற்றும் காங்., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி