லாரி மோதி தலைமைக் காவலர் பலி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதி பணிக்குச் சென்ற தலைமை காவலர் இறந்தார். விழுப்புரம் மாவட்டம், கே.ஆர்., பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி, 40; செஞ்சி, மதுவிலக்கு அமல் பிரிவில் தலைமைக் காவலராக பணி புரிந்து வந்தார். கஞ்சனுார் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் நேற்று இரவு 7:30 மணியளவில் கோட்டக்குப்பம் பகுதியில் பணி செய்ய தனது ஸ்பிளண்டர் பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்றார். கஞ்சனுார் வருவாய் அலுவலகம் அருகே, செஞ்சி யில் இருந்து விழுப் புரம் நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி பைக் மீது மோதியதில் பஞ்சமூர்த்தி படுகாயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுா ரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின் றனர்.