உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தலை மறைவு குற்றவாளி கைது

தலை மறைவு குற்றவாளி கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடந்த வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி பெருமாள் கோவில் தெருவில், 1999ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன், 49; கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்த இவர், இரண்டரை ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் வெங்கடேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ